AGNI LINGAM – Tamil lyrics & English translation

 In Lyrics & Translation, Production, Video, What's new

அக்னி லிங்கம்

(அருணகிரி மகிமை)

 பாடல் வரிகள்

 1. மனத்தினில் நினைத்திடு கணத்தினில் வினைத்தொடர் பறுத்துபர முக்தியருளும்!

அனைத்துலகின் நட்டநடு உற்றிடு விளக்கென நிலைத்தொளி கொடுக்கும் உருவம்!

விசித்திரம் மிகுத்தபல அற்புதம் நிகழ்த்துகிற சித்தர்கணம் நித்தம் உலவும்!

அசைத்துயிர் உலுக்கிடு நசைச்சரு கெரித்திடு பொருப்பிது நெருப்பு வடிவம்!

 1. சிறக்கும்ஐவ கைத்தலம் அவற்றிலிது சித்திதரும் முக்திதரும் அக்கினி தலம்!

சினத்தொடு எதிர்த்திடு புரத்தினை சிரிப்பினில் எரித்தவனின் உத்தம தலம்!

யுகப்பிரள யத்தும்அசை வற்றுஇசை பெற்றுநிலை  நிற்குமொரு நித்திய தலம்!

உதித்திடு கிருத்திகையில் உச்சிமலை யிற்சுடர் விளக்குஇடும் உற்சவ தலம்!

 1. இகத்துழல் உளத்தினை இழுத்துயர் பரத்துவ சிவத்தினில் நிறுத்திடு மலை!

அகத்தினில் ஜெபிப்பவர் சுகத்தினில் லயித்துவிட நிட்டையில் இருத்திடு மலை!

ஜெகத்தினில் திகைக்கிறநல் உத்தமர் தமக்கொரு வழித்துணை அனுப்பிடு மலை!

மிகப்பெருமை பெற்றதொரு சுத்தசிவ வெற்புஇது பொற்புமிகு கற்பக மலை!

 1. அடித்தலம் அதைத்தொட நிலத்தினை துளைத்தரி களைத்துவிட  வைத்திடுமலை!

முடித்தலம் அதைத்தொட அனத்தின்வடி வுற்றயன் இளைத்திட நகைத்திடு மலை!

தனக்குள்உள தற்சொருப தத்துவ விளக்கமதை முற்றிலும் உணர்த்திடு மலை!

வனப்புடை வனத்தினில் குகைக்குடி யிருப்பினில் தவத்தினர் வசித்திடு மலை!

 1. மலர்க்கணை தொடுத்துணர் வழித்திடும் மதப்பயல் செருக்கினை அடக்கிடு மலை!

மழுப்படை மதிப்பிறை முடைத்தலை தரித்தவன் விழுப்புகழ் ஒலித்திடு மலை!

பலப்பல பிறப்பினில் இயற்றிய பவத்தினை அழித்திடு தவத்திரு மலை!

பரப்பிரம சத்பொருள் பருப்பொருள் உருப்பெற நினைத்துவடி வுற்றிடு மலை!

 1. படைப்பவனும் விட்டுணுவும் அட்டதிசை ரட்சகரும் நித்தம்வழி பட்டிடு தலம்!

வடக்கிலுள நற்கயிலை ஒப்புஎன மிக்கபுகழ் பெற்றதொரு தட்சிண தலம்!

இயற்கையின் எழிற்கரம் வியப்புமிக இப்புவி மகட்குசிரம் வைத்த மகுடம்!

இயக்குவிசை யிற்சுழலும் அத்தனை பொருட்கும்நல்  அனுக்கிரக சக்தி நிலையம்!

7.      நமச்சிவ நமச்சிவ எனத்துதி உரைப்பவர் மனத்துயர்கள்  விட்டு விலகும்!

உமைக்கொரு பகுப்பினை அளித்தவன் நமக்குமொரு  நற்கதி அளித்திடும் இடம்!

துதித்துமிகு பக்தியுடன் சுற்றிவரு பக்தர்களின் பற்றுஅவை முற்றும் அழியும்!

நதிச்சடையில் நச்சரவு கட்டுமொரு பித்தனெனும் அத்தனருள் நித்தம் நிறையும்!

_____________________________________

சிவன் மலையில் இருக்குமிடம் கயிலைகிரி!- அந்த

சிவனே மலையாய் இருக்குமிடம் அருணகிரி!

Penned by Sri Padmadevan & translated by Harinie Jeevitha

Agni lingam

 1. The fire abode of Lord Siva, where sacred souls roam the place, is situated at the centre of the Universe. The Lord, in his blazing form, burns our iniquities to ashes. A momentary meditation of this majestic mountain bestows us with Mukti, obliterating sins of the previous births.
 1. The self- manifested Lord, who burnt the Tripura to ashes with his esoteric smile, emerges as the pillar of fire and remains unaffected even by apocalypse. Among the five abodes, this fire abode of Siva blesses us with Siddhi and Mukti.
 1. In this magnanimous mountain, where devotees lay in a state of supreme trance, the Lord himself assumes the form of the Ultimate custodian and leads them to the actualisation of the Absolute.
 1. The all- encompassing form of the Lord, the origin and end of which Vishnu and Brahma failed to find, stretches endlessly and eternally dwells in the hearts of sages.
 1. Adorned with the crescent moon and tiger skin, Lord Siva curbed Cupid’s arrogance. He dissociates his devotees from worldly attachments. As the invincible pillar of fire, he remains the personification of Sachidhaanandham.
 1. Worshipped by Vishnu, Brahma, Surya, Chandra and the Demi gods of the eight directions, this holy abode stands on par with Kailasa, as a befitting embellishment to Mother Earth.
 1. With Ganges gracefully adorning his head and snake ornaments slithering, he has given one half of his body to his consort, Uma. Those who devoutly chant his name will be relieved of all miseries.

This glorious abode known as Aruna Giri, Arunaa Malai and Thiruvannamalai, is worshipped by Indra, Agni, Yama, Niruthi, Varuna, Vayu, Kubera, along with Surya and Chandra. This hymn is a benefaction to the fire abode , where the Lord manifests all the Pillar of Fire.

 

 

 

 

 

 

 

 

 

 

Recommended Posts

Leave a Comment

Start typing and press Enter to search